ராமேஸ்வரம் : பாம்பனில் 14 மீன் கம்பெனிகளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ரூ.70 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகின. ராமேஸ்வரம் அருகே பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் ஒரு மீன் கம்பெனியில் திடீரென தீப்பிடித்தது. பலத்த காற்று வீசியதால் தீ மளமளவென அடுத்தடுத்த கம்பெனிகளுக்கு பரவியது. மீனவர்கள் கடல் நீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவலறிந்த ராமேஸ்வரம் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் மீனவர்கள் தனஉலகு, சந்தியா, மோட்சம், தனபால், சந்திரபோஸ், சீலன் உட்பட 14 பேரின் மீன் கம்பெனிகள் எரிந்து சாம்பலாயின. இவற்றில் வைக்கப்பட்டிருந்த ரூ.70 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள், உபகரணங்கள், 9 டூவீலர்கள் எரிந்து சாம்பலாயின. மீன் கம்பெனிகளுக்கு அருகில் உள்ள குடிசையிலும் தீப்பற்றியது. வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்த மைக்கேல், இவரது மனைவி இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீவிபத்து குறித்து பாம்பன் போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் கலெக்டர் நடராஜன், ராமேஸ்வரம் தாசில்தார் ரத்தினவள்ளி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
Thank you : Dinakaran...
No comments:
Post a Comment