ஸ்மார்ட்போன் கருவிகளைத் தவிர வீட்டு உபயோக பொருட்களான எம்ஐஏர் பியூரிஃபையர், எம்ஐ பாக்ஸ் செட்-டாப் பாக்ஸ் மற்றும் இதர கருவிகளை தயாரிக்கும் நிறுவனமாக சியோமி விளங்குகின்றது. இந்தியாவில் அதிவேகமாக முன்னணி இடத்தைப் பிடித்திருக்கும் சியோமி நிறுவனம் விற்பனையிலும் சிறந்து விளங்குகின்றது.
தற்சயம் சியோமி நிறுவனத்தின் புதிய கருவி சார்ந்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. இந்த வீடியோவில் அந்நிறுவனத்தின் வளைந்த திரை கொண்ட ஸ்மார்ட்போன்இயக்கப்படுவது தெளிவாக பதிவியாகியுள்ளது.
யுகு
வளையும் திரை கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் ஒன்றினை பயனர் தன் கையில் வைத்து இயக்கும் வீடியோ யுகு எனும் சீன இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கருவியானது MIUI சார்ந்த யூஸர் இன்டர்ஃபேஸ் கொண்டு இயங்குகின்றது.
அம்சங்கள்
வீடியோவில் பயனர் கருவியினை சீராக பயன்படுத்துவது தெளிவாக தெரிகின்றது. மேலும் கேம் ஒன்றையும் விளையாடுவது கருவி சார்ந்த எதிர்பார்ப்பினை எகிறச் செய்கின்றது.
வளைந்த டிஸ்ப்ளே
தொழில்நுட்ப சந்தையைப் பொருத்த வரை வளைந்த டிஸ்ப்ளேக்கள் சில காலமாக நமக்கு அறிமுகமான ஒன்றாகவே இருக்கின்றது. நோக்கியா நிறுவனத்தின் மார்ஃப் கான்செப்ட் 2008 ஆம் ஆண்டிலேயே வளைந்த டிஸ்ப்ளேவுடன் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
சோனி
இதன் பின் சோனி மற்றும் சாம்சங் என பல்வேறு நிறுவனங்களும் வளைந்த டிஸ்ப்ளே கொண்ட கான்செப்ட் கருவிகளை அறிமுகம் செய்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றாக இருந்த போதும் அதிகாரப்பூர்வமாகச் சந்தையில் இத்தொழில்நுட்பம் வெளியிடப்படவில்லை.
எல்ஜி
இதே போல் எல்ஜி நிறுவனமும் ரூ.11,768 கோடி வரை வளைந்த டிஸ்ப்ளேக்களை தயாரிக்க முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்திருக்கின்றது. இதன் காரணமாக அந்நிறுவனத்தின் வளைந்த டிஸ்ப்ளேக்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கான பணிகள் நடைபெற்று வருவதையே பிரதிபலிக்கின்றது.
சாம்சங்
மேலும் சாம்சங் நிறுவனமும் வளைந்த டிஸ்ப்ளேக்களை கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், அடுத்த ஆண்டு துவக்கத்தில் அந்நிறுவனத்தின் வளைந்த திரை கொண்ட கருவிகளை எதிர்பார்க்கலாம் எனக் கூறப்படுகின்றது.
சியோமி
வளைந்த டிஸ்ப்ளே கொண்ட கருவிகளைப் பொருத்த வரை சியோமி நிறுவனம் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றது என்றாலும், அந்நிறுவனம் வளைந்த டிஸ்ப்ளே கொண்ட கருவிகளைத் தயாரித்து வருவது தற்சமயம் உறுதியாகியுள்ளது.
No comments:
Post a Comment