எல்லா மெசேஜிங் அப்ளிகேஷன்களைப் போன்றே வாட்ஸ்ஆப் செயலியிலும் வீடியோ கால் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. நீங்களும் இதைப் பயன்படுத்த வேண்டுமா??
மற்ற குறுந்தகவல் செயலிகளைப் போன்றே வாட்ஸ்ஆப் செயலியிலும் வீடியோ காலிங் அம்சம் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் இதில் ஓர் ட்விஸ்ட்..
வாட்ஸ்ஆப் ஆண்ட்ராய்டு இயங்குதளப் பயனர்களுக்கு வீடியோ கால் வசதியானது வாட்ஸ்ஆப் பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் படி வாட்ஸ்ஆப் புதிய பதிப்பு v2.16.316 செயலியில் வீடியோ காலிங் அம்சத்தினைப் பயன்படுத்திப் பார்க்க முடியும். பீட்டா பதிப்பில் வீடியோ காலிங் சோதனை செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
பட்டன்
அழைப்புகளை மேற்கொள்ளும் பட்டன் மூலம் புதிய வீடியோ காலிங் அம்சத்தினைப் பயனர்கள் அனுபவிக்க முடியும். டையலர் ஐகானினை அழுத்தும் போது வாட்ஸ்ஆப் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் மேற்கொள்ளும் ஆப்ஷன்கள் கிடைக்கும்.
பீட்டா
தற்சமயம் சோதனை செய்யப்பட்டு வருவதால், வீடியோ கால் மேற்கொள்ள மறுமுனையில் வாட்ஸ்ஆப் பயன்படுத்துபவரும் பீட்டா பதிப்பினை பயன்படுத்துவது அவசியம் ஆகும்.
திரை
ஒருவேலை நீங்கள் வீடியோ கால் மேற்கொள்பவர் பழைய பதிப்பு வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் போது போனில் "Couldn't place call" என்ற வார்த்தை கேட்கும், மேலும் இதே தகவல் குறுந்தகவல் வடிவிலும் அனுப்பப்படும். இவ்வாறு தகவல் வரும் போது மறுமுனையில் ஆ பயன்படுத்துவோர் செயலியை அப்டேட் செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.
தகவல்
வாட்ஸ்ஆப் வீடியோ கால் எதிர்பார்த்ததை விட நன்றாகவே இயங்குவதாக இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்துடன் குறைவான இண்டர்நெட் வேகத்திலும் சீரான வீடியோ கால் அனுபவம் கிடைப்பதாகக் கூறப்படுகின்றது.
வெளியீடு
தற்சமயம் சோதனை அடிப்படையில் மட்டுமே வெளியிடப்பட்டிருக்கும் வாட்ஸ்ஆப் வீடியோ கால் அனைத்துப் பயனர்களுக்கும் வெளியிடப்படும் தேதி குறித்து எவ்வித தகவலும் இதுவரை அறிவிக்கப்படவில்லை
Thanks :tamil.gizbot
No comments:
Post a Comment