Sunday, October 23, 2016

ஏ.டி.எம் கொள்ளையர்கள்

ஏ.டி.எம் கொள்ளையர்கள்

எதிர் கொள்வது எப்படி?
எச்சரிக்கை கட்டுரை!-------திரு.ஆர்.வரதராஜ் M.A,M.L,M.B.A.,(முன்னாள் காவல்துறை அதிகாரி)தலைவர் நே.ப.தி.மு.க. (N.P.T.M.K)சமீபத்தில் கல்கத்தாவில் அரியானாவைச் சேர்ந்த ஏ.டி.எம். கொள்ளையர்கள் சிலர் பிடிபட்டார்கள்.அப்போது அவர்கள் இந்தியாமுழுவதும் ஏழுமாநிலங்களில் இதுவரை 150 ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுத்து வந்தவர்களிடம் கத்தி மற்றும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பல லட்சம் பணத்தை கொள்ளையடித்ததாகவாக்கு மூலம் கொடுத்திருந்தார்கள்.சில மாதங்களுக்கு முன் சென்னையில் நந்தினி என்ற பெண் இரவு நேரத்தில் ஏ.டி.எம்மில் பணம் எடுத்து வந்த போது ஒரு கொள்ளையன் கத்தியைக் காட்டி மிரட்டி பணத்தைக் கொள்ளையடித்துச்சென்றான். இருசக்கர வாகனத்தில் கொள்ளையனை பிடிப்பதற்காக அந்தப் பெண் துரத்தி சென்ற போது இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளாகி அந்த பெண் இறந்து போனார்.எனவே இப்படிப்பட்ட ஏ.டி.எம். கொள்ளைகளை எதிர் கொள்வது எப்படி? என்ற விழிப்புணர்வை உங்களுக்கு உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.நீங்கள் ஏ.டி.எம்மில் பணம் எடுத்து வெளியே வரும் சமயத்தில் ஏதாவது கொள்ளையர்கள் உங்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணத்தை பறிக்க முயன்றால் அவனை எதிர்த்துப் போராடாமல் அவனிடம் பணத்தைக் கொடுத்து விட்டு முதலில் உங்கள் உயிரைக்காத்துக் கொள்வது தான் உங்களதுமுதல் குறிக்கோளாக இருக்க வேண்டும்.காரணம் நீங்கள் இழக்கும் பணத்தை திரும்ப பெறுவதற்காக புதிய இன்சூரன்ஸ் திட்டங்கள் வந்திருக்கின்றனஅதைப் பற்றி நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.இந்த இன்சூரன்ஸ் விதிகளின்படி நீங்கள் ஏ.டி.எம்மில் பணம் எடுத்த பத்து நிமிடங்களுக்குள் உங்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டால் அப்படி கொள்ளையடிக்கப்பட்ட பணம் 48 மணி நேரத்திற்குள் உங்களுக்கு திருப்பி கிடைக்காத பட்சத்தில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை உங்கள் இன்சூரன்ஸ் கம்பெனி உங்களுக்கு முழுவதுமாக திருப்பிக் கொடுத்து விடும்.அதனால் இரவு நேரங்களில் நீங்கள் ஏ.டி.எம்மில் பணம் எடுக்கும் போது வீட்டிலிருந்து 10 நிமிட இடைவெளிக்குள் செல்லக் கூடிய ஒரு ஏ.டி.எம்மை தேர்ந்தெடுங்கள். காரணம் ஏ.டி.எம்மில் பணம் எடுத்து விட்டு நீங்கள் வீட்டிற்கு திரும்பிவரும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் உங்கள் பணம் கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்படலாம். எனவே உங்கள் இடத்திற்கும் ஏ.டி.எம்மிற்கும் பயண நேரம் பத்து நிமிடத்திற்குள்உள்ள ஒரு ஏ.டி.எம்மை நீங்கள் தேர்ந்தெடுத்தால் உங்கள் பணம்கொள்ளையடிக்கப்பட்டால் கூட இன்சூரன்ஸ் மூலம் இழந்த பணத்தைஉங்களால் திரும்ப பெற முடியும்.அது மட்டுமல்ல பணத்தை எடுத்து வருபவர்கள் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு மரணம் அடைந்தால் அதற்கு தனி இழப்பீடும் கொள்ளையர்கள் தாக்கியதில் காயம் ஏற்பட்டால் அதற்கான சிகிச்சைக்கு ஆகும் செலவும் உங்களுக்கு இழப்பீடாக கிடைக்கும்.ஏற்கனவே நான் காவல் துறையில் இருந்த போது இன்னொரு வகையான ஏ.டி.எம் குற்றமும் நடந்திருக்கிறது. அதாவது ஏ.டி.எம்மிலிருந்து எடுக்கப்பட்ட பணத்தை கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளையடித்து விட்டு அந்த நபருடைய கார்டையும் மொபைல் போனையும் பறித்துக் கொண்டு அதனுடைய Pin Number ஐயும் கேட்டுத் தெரிந்து கொண்டு கொள்ளையர்கள் அந்த கார்டை உப யோகித்து மீண்டும் கணக்கிலுள்ள அத்தனை பணத்தையும் எடுத்துச் சென்றுவிட்டனர்.நான் மேற்கூறிய இன்சூரன்ஸ் திட்டத்தின்படி உங்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட பிறகு உங்கள் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி கொள்ளையர்கள் உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்படும் மற்ற பணத்தையும் இன்சூரன்ஸ் உங்களுக்கு திருப்பிக் கொடுக்கும்.ஆனால் பணம் எடுத்த பத்து நிமிடத்திற்குள்மட்டுமே உங்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டால் தான் இன்சூரன்ஸ் உங்கள்பணத்தை திருப்பிக் கொடுக்கும் என்ற விதி இருப்பதால் உங்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டவுடன் நீங்கள் புகாரை பதிவுசெய்ய வேண்டும்.புகாரை பதிவு செய்வதில் பல பிரச்சனைகள் உண்டு. வங்கியின் Customer care க்கு நீங்கள் போன் செய்தால் அது எப்போதும் engaged ஆகவே இருக்கும். . எனவே பணம் கொள்ளையடிக்கப்பட்டவுடன் நீங்கள் உடனே 100 எண்ணிற்கு போன் செய்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட விஷயத்தை பதிவு செய்ய வேண்டும். காரணம் நீங்கள் செய்யும் அத்தனை கால்களும் போலீஸ் கண்ட்ரோல் ரூமில் பதிவு(Record செய்யப்படும்) Police Control room ற்கு நீங்கள் செய்த call ஐ அத்தாட்சியாக பெற்று நீங்கள் எளிதில் இன்சூரன்ஸை பெற முடியும்.அடுத்து நீங்கள் இந்த ஏ.டி.எம் கொள்ளையைப் பற்றி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் கொடுத்த புகார் நகலும் இன்சூரன்ஸ் பெறுவதற்கு மிகவும் அவசியம். . ஆனால் இதில் தான் பிரச்சனையே இருக்கிறது.குற்றம் நடந்தவுடன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் அது தங்கள் எல்லையிலேயே வராது என்று கூறி எல்லா காவல் நிலையங்களிலும் புகார்களை வாங்க மறுப்பார்கள்.எனவே தமிழ்நாடு காவல் துறை வலைத்தளத்தில் (Website) ஆன்லைன் மூலமாக புகார் அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. கொள்ளை நடந்தவுடன்www.tnpolice.gov.inஎன்ற வலை தளத்தில் உங்கள் புகாரை ஆன்லைன் மூலமாக பதிவு செய்யுங்கள். இந்தப் புகார் நகலை நீங்கள் இன்சூரன்ஸ் கம்பனிக்கு கொடுத்தாலே போதுமானது. சமீபத்தில் நடந்த ஏ.டி.எம். கொள்ளையில் இறந்து போன அந்த பெண் இது போன்ற இன்சூரன்ஸை பதிவு செய்திருந்தால் அந்த பெண்ணிற்கு அந்த மரணம் நேர்ந்திருக்காது. தான் இழந்த 19,000 ரூபாய் பணத்தை மீட்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அந்தகொள்ளையனை துரத்தி சென்றதால் தான் அந்தப் பெண்ணின் உயிர் பறி போனது. இது போன்ற ஒரு இன்சூரன்ஸை பதிவு செய்திருந்தால் அந்த பெண் பணத்தை மீட்பதற்காக தன் உயிரை இழந்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. எனவே ஏ.டி.எம். கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் இது போன்ற இன்சூரன்ஸை உங்கள் பெயரில் பதிவு செய்து கொள்ளுங்கள்.இதே போல் ஏ.டி.எம்மில் பணம் எடுப்பவர்களுக்கு நான் கீழ்கண்ட அறிவுரைகளை கூற விரும்புகிறேன்.1. பொதுவாக இரவு நேரங்களில் பத்து மணிக்கு மேல் ஏ.டி.எம்மில் பணம் எடுப்பதை தவிர்த்து விடுங்கள்.2. பணம் மிகவும் அவசியமாக தேவைப்பட்டால் இரவு 10 மணிக்கு மேல் பணம் எடுக்கச் செல்லும் போது துணைக்கு ஒரு நபரையும் அழைத்து செல்லுங்கள்.3. இரவு பத்து மணிக்கு மேல் பணம் எடுக்கும் பட்சத்தில் மெயின் ரோட்டில் ஆட்கள் நடமாட்டம் இருக்கக்கூடிய எல்லையில் இருக்கும் ஏ.டி.எம்மில் மட்டுமே பணத்தை எடுங்கள்.4.நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஏ.டி.எம் உங்கள் வீட்டிலிருந்து பத்து நிமிடம் பயண எல்லையில் உள்ளதாக இருக்க வேண்டும். காரணம் நீங்கள் பணம் எடுத்த பத்து நிமிடங்களுக்குள் கொள்ளை நடந்தால் மட்டுமே நீங்கள் இந்த இன்சூரன்ஸ் சலுகையை பெற முடியும்.5.ஏ.டி.எம்மில் பணம் எடுப்பதற்குமுன் உங்கள் சுற்றுப்புறத்தைநோட்டமிடுங்கள்.சந்தேகப்படக்கூடிய நபர்கள் ஏ.டி.எம் அருகே சுற்றிக் கொண்டிருந்தால் அந்த ஏ.டி.எம்மில் பணம் எடுப்பதை தவித்து விடுங்கள்.6. கொள்ளையர்கள் கத்தியையோ அல்லது துப்பாக்கியையோ காட்டி மிரட்டி பணத்தைக் கேட்டால் அவர்களை எதிர்த்துப் போராடவோ அல்லது அவர்களை துரத்திப் பிடிக்க முயற்சிக்கவோ வேண்டாம். காரணம் உங்கள் பணம் இன்சூரன்ஸ் செய்யப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொண்டு அமைதியாக செயல்படுங்கள்.உங்களுக்கு எந்த வங்கியில் ஏ.டி.எம். வங்கி கணக்கு இருக்கிறதோ அந்த வங்கியில் கேட்டு உங்கள் ஏ.டி.எம்மிற்க்கான கொள்ளையை ஈடு செய்யும் இன்சூரன்ஸை கேட்டு பதிவு செய்யுங்கள்..இது வரை நாம் பார்த்தது ஏ.டி.எம்மில் பணம்கொ எடுத்து வருபர்களிடம் கொள்ளையர்கள் நடத்தும் நேரடியான குற்றங்கள்.ஆனால் மறைமுகமாக ஏ.டி.எம் இயந்திரத்தில் பல மோசடிகளை செய்து உங்கள் பணத்தை அபகரிக்கபல மோசடிகள் இன்று உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றன

Jobs in Singapore

Jobs in Singapore    𝙎𝙞𝙣𝙜𝙖𝙥𝙤𝙧𝙚 𝙉𝙚𝙬 𝙍𝙚𝙦𝙪𝙞𝙧𝙚𝙢𝙚𝙣𝙩𝙨 𝘾𝙤𝙣𝙩𝙖𝙘𝙩 +91 9779259557\ 𝐍𝐀𝐌𝐄 - 𝐀𝐊𝐁𝐀𝐑 𝐊𝐇𝐀𝐍 𝐖𝐇...