ஈராக்கின் மசூல் நகரில் பயங்கரவாதிகளை வெளியேற்றுவது தொடர்பான போரில் அனைவரின் கவனமும் சென்று கொண்டிருக்கும் நேரத்தில் ஈராக் நாடாளுமன்றத்தில் மதுவை தடை செய்வது தொடர்பான மசோதா ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மது உற்பத்தி மற்றும் இறக்குமதிக்கு தடை விதிக்கும் மசோதாவில் ஒரு சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்ட ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு சில அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் போதிய ஆதரவு இருந்ததன் காரணமாக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

தடையை மீறி மது உற்பத்தி செய்தாலோ அல்லது இறக்குமதி செய்தாலோ ஒவ்வொரு முறையும் 10 முதல் 25 மில்லியன் தினார்கள் அபராதம் விதிக்கப்படும் எனவும் மதுவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது