Thursday, October 20, 2016

மன அழுத்தத்துக்கு உடற்பயிற்சி சிறந்த மருந்து!

இனம்புரியாத கவலை, நம்பிக்கையின்மை, விரக்தி போன்ற உணர்வுகள் ஒருவருக்கு இருந்தால் அவை மன அழுத்தத்தின் அறிகுறிகள் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய மருத்துவர்கள், ''விரக்தியாகப் பேசுதல், அளவுக்கு மீறிய கோபம், இனம் புரியாத கவலை, தூக்கமில்லாமல் இருப்பது, பசியின்மை, பிறருடன் பேசுவதைக் குறைத்துக் கொள்வது, அடிக்கடி சோர்ந்து போவது, இனம் புரியாத பயம், தனிமையில் அழுவது, தேவையின்றி பதற்றமடைவது, காரணமே இல்லாமல் எப்போதும் சோகமாக இருப்பது, அடிக்கடி தற்கொலை எண்ணம் ஏற்படுவது ஆகிய அனைத்துமே மன அழுத்தத்துக்கான அறிகுறிகள்'' என்று கூறியுள்ளனர்.

முக்கியமாக மன அழுத்தம் உள்ளவர்கள், தனிமையைத் தவிர்க்க வேண்டும் என்றும், பிடித்தமானவரிடம் மனம்விட்டுப் பேச வேண்டும் என்றும் கூறியுள்ளனர். மன அழுத்தம் ஏற்படாமலிருக்க உடற்பயிற்சிதான் சிறந்த மருந்து என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

நன்றி விகடன்..

உலகின் எந்த விமான நிலைய வை-ஃபை பாஸ்வேர்டும் இங்கே கிடைக்கும்!

அமெரிக்காவில் அடுத்த விமானத்துக்காக 5 மணி நேரம் காத்திருக்கிறீர்களா? அதே நேரத்தில் துபாய் விமான நிலையத்தில் உங்களது ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்ய இன்டெர்நெட் இல்லையா? இதெற்கெல்லாம் உங்களுக்கு தேவை வை-ஃபை பாஸ்வேர்டு. உலகின் எந்த விமான நிலையத்தில் இருந்தாலும் வை-ஃபை பாஸ்வேர்ட் உங்களுக்கு கிடைக்கும் என்றால் உங்கள் பதில் ''மகிழ்ச்சி'' தானே...அதை தான் செய்திருக்கிறார் அனில் போலட்
அனில் போலட் ஒரு ட்ராவலர், வல பதிவாளர், கம்ப்யூட்டர் செக்யூரிட்டி இன்ஜினியர். கடந்த ஆறு வருடங்களாக உலகைச் சுற்றி வரும் இவர் ஒவ்வொரு முறையும் தனது பயணத்தின்போது விமான நிலையங்களில் வை-பை பாஸ்வேர்ட் இல்லாமல் இருந்திருந்தால் மிகவும் கஷ்டப்பட்டிருப்பேன் என்கிறார். அதற்காக அவர் பயணித்த அனைத்து விமான நிலையங்களின் வை-பை பாஸ்வேர்டுகளை மேப்பில் தொகுத்துள்ளார்.






அதுமட்டுமின்றி தான் அடுத்து செல்ல இருக்கும் ஊர்கள் என்ன?
மற்ற யாரேனும் எந்த விமான நிலையத்தின் வை-ஃபையை பயன்படுத்தி அதன் விவரம் இதில் இல்லையென்றால் அவருக்கு அனுப்பும் வசதியையும் தந்துள்ளார். மற்றவர்கள் அளித்த விவரம் மற்றும் இவரது ஆறு வருட பயணத்தின்போது கிடைத்த அனைத்து விமான நிலையங்களின் தகவல் கீழே உள்ள மேப்பில் இருக்கிறது. இன்னும் தெற்காசிய நாடுகளை அவர் அப்டேட் செய்யவில்லை என்பதால் இந்திய விமான நிலைய விவரங்கள் இல்லை.
உலகம் சுற்றுவது தான் இவரது பொழுதுபோக்கு இன்னும் நிறைய நாடுகளின் பயணங்களில் அங்குள்ள விமான நிலையங்கள் பற்றியும், அதன் வை-பை பற்றியும் தொடர்ந்து இந்த மேப்பில் அப்டேட் செய்வேன் என்று கூறியுள்ளார். இது மட்டும் இவர் வேலை இல்லை. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்க்கை தேடலை நோக்கிய பயணம் மேற்கொள்ளும் இவர் துருக்கி நாட்டைச் சேர்ந்தவர். இதுவரை என்பது நாடுகளின் விமான நிலையங்களுக்கு பயணித்திருக்கிறார்.

நன்றி விகடன்...

பேரனைக் கொன்று நேர்மையை நிலை நாட்டிய சவுதி மன்னர்.. கிங் சல்மான் !



பசுவின் கன்றை கொன்ற மகனைத் தேர்க் காலில் தலையை இடறச் செய்து, நீதி வழங்கினான் மனுநீதிச் சோழன். தற்காலத்திலும் அப்படி ஒரு சம்பவம் சவுதி அரேபியாவில் நடந்துள்ளது. வளைகுடா நாடான சவுதியில் என்ன குற்றம் செய்தாலும் இஸ்லாமிய முறைப்படித்தான் தண்டனை வழங்கப்படும். கொலைக்குப் பதில் கொலை, கையை வெட்டினால் பதிலுக்கு கை வெட்டப்படும்.
தற்போது அரேபிய அரசராக இருப்பவர் கிங் சல்மான். சவுதியில் தவித்த ஆயிரக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை செட்டில் செய்ய உத்தரவிட்டவர். தீவிரவாதச் செயல்களால் பாதிக்கப்படும் அண்டை நாடுகளுக்கும் உதவி வருபவர். வளைகுடா அரசர்களில் கிங் சல்மான் சற்று வித்தியாசமான மனிதநேய மிக்க அரசராகத்தான் இதுவரைத் தெரிந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக கொலைக்குற்றத்தில் ஈடுபட்ட தனது பேரனின் தலையை துண்டிக்க உத்தரவிட்டு, உலக மக்களை வியப்படைய வைத்துள்ளார். இத்தனை நாளும் மனித நேயமிக்க மனிதராக தெரிந்த கிங் சல்மானின் போர்க்குணத்தைக் கண்டு இப்போது சவுதி மக்களே மிரண்டு போயுள்ளனர்.
கடந்த 1935-ம் ஆண்டு பிறந்த கிங் சல்மான் தனது 19-வது வயதில் முதன்முறையாக நிர்வாகப் பொறுப்புக்கு வந்தார். 2015-ம் ஆண்டு வரை இளவரசராகத்தான் சல்மான் இருந்தார். சல்மானின் சகோதரர் கிங் அப்துல்லா மரணமடைந்ததையடுத்து, தனது 79-வது வயதில் சவுதி அரேபியாவின் மன்னராக சல்மான் பதவியேற்றார். பதவியேற்றபோது, ''திருடியது என் மகளாக இருந்தாலும் கையை வெட்டுவேன் என்றார்கள் நபிகள். அதுபோல் குர்ஆனில் என்ன சொல்லப்பட்டுள்ளதோ அதே வழியிலானத் தண்டனைதான் எனது ஆட்சியிலும் தரப்படும். எனது குடும்பத்தினரால் பொதுமக்களுக்கு தொல்லை நேர்ந்தால் சட்டத்தில் என்ன சொல்லப்படுகிறதோ அதே தண்டனைதான் கிடைக்கும்'' என்று அறிவித்திருந்தார்.
கிங் அப்துல்லாவின் நேர்மையை சோதிக்கும் வகையில் கடந்த 2012-ம் ஆண்டு சவுதியில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. சவுதி அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் இளவரசர் கபீர். நண்பருடன் ஏற்பட்டத் தகராறில் அவரைச் சுட்டுக் கொன்று விட்டார் கபீர். இதனைத் தொடர்ந்து கபீர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நீதி விசாரணை நடந்தது. கிங் சல்மான் ஆட்சியில் நீதி விசாரணையில் எந்த குறுக்கீடும் ஏற்படவில்லை. குற்றத்துக்கான ஆதரங்கள் திரட்டப்பட்டு முறையாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. கொலைக் குற்றத்துக்கு இஸ்லாத்தில் பதிலுக்கு கொலைதான் தண்டனை என சொல்லப்பட்டுள்ளதால், அதே வழித் தண்டனை இளவரசர் கபீருக்கு வழங்கப்பட்டது.
ஆனாலும், குற்றவாளியை மன்னிக்கும் இறுதி அதிகாரம் சவுதி மன்னருக்கு உண்டு. உறவினர்கள் பலர் மன்னரிடம் முறையிட்டு, கபீரை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் மன்னரிடம் எடுபடவில்லை. மன்னர் மனதை மாற்றிக்கொள்ளவில்லை. 'எனது பேரனாக இருந்தாலும் அல்லாஹ்வின் சட்டத்தில் சமரசம் செய்து கொள்ள எந்த இடமும் இல்லை'' எனக் கூறி தண்டனையை உறுதி செய்தார். இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் ரியாத்தில் இளவரசர் கபீரின் மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இதற்கு முன் கடந்த 1975-ம் ஆண்டு மன்னர் ஃபைசலை கொலை செய்த குற்றத்துக்காக இளவரசர் ஃபைசல் பின் முசைத் பொது இடத்தில் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டார். இளவரசர் பைசலின் தலை துண்டிக்கப்படுவதை பார்க்க 10 ஆயிரம் பேர் கூடியிருந்தததாகவும் தலை துண்டிக்கப்பட்டதும் ''காட் இஸ் கிரேட்... ஜஸ்டிஸ் டன்'' என முழக்கமிட்டதாக நியூயார்க் டைம்ஸ் அப்போது செய்தி வெளியிட்டிருந்தது. அதனால், அதே பாணியில்தான் இளவரசர் கபீரின் தலையும் துண்டிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால், இதுதொடர்பாக எந்த புகைப்படமும் சவுதி அரசு சார்பில் வெளியிடப்படவில்லை.
இங்கே இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். பைசல் பின் முசைத் அரச குடும்பத்தைச் சேர்ந்தவரையே கொலை செய்திருந்தார். அதனால் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது பெரிய விஷயமே இல்லை. ஆனால், கபீர் கொலை செய்தவர் அரசக் குடும்பத்தைச் சார்ந்தவர் இல்லை. ஆனாலும் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தனது ஆட்சியில் யார் தவறு செய்தாலும் தண்டனையில் வேறுபாடு இருக்காது என்பதை சவுதி மக்களுக்கு உணர்த்தியிருக்கிறார் கிங் சல்மான்.
கடந்த 1932-ம் ஆண்டும் 1953-ம் ஆண்டு வரை சவுதி அரேபியா மன்னராக இருந்தவர் அப்துல்லாஸிஸ். இவர்தான் சவுதியின் தொழில் வளர்ச்சிக்கும் செல்வச் செழிப்புக்கும் வித்திட்டவர். கபீர் கிங் சல்மானுக்கு நேரடி பேரன் இல்லையென்றாலும் மறைந்த மன்னர் அப்துல்லாஸிசின் வழியில் தூரத்து உறவாகிறார்.
நீதியை நிலை நாட்டுவதில் தான் ஒரு 'கிங்' என நிரூபித்து விட்டார் கிங் சல்மான்!
நன்றி: விகடன்

சவுதி அரேபியாவில் வேலை செய்யும் உங்களுக்கு, உங்களுடைய நிறுவனம் தொடர்பான முறைப்பாடுகளுக்கு அவசர அழைப்பு No... !




சவுதி அரேபியாவில் வேலை செய்யும் உங்களுக்கு உங்களுடைய நிருவணம் தொடர்பான முறைப்பாடுகளை சவுதி தொழிலார் அமைச்சின் அவசர அழைப்பு மையத்தின் இலக்கமான 19911 எனும் இலக்கத்திற்கு தெரியப்படுத்துவன் மூலம் நிருவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியிம்.
இதனனால் நீங்கள் வேலை செய்யும் நிருவனத்திற்கு எதிராக சவுதி தொழிலார் அமைச்சு அபராதம் விதிக்கும் அதேவேளை உங்களுக்கான நட்டஈட்டினையிம் அமைச்சு பெற்றுத்தரும்.
இந்த முறைப்பாட்டு இலக்கத்திற்கு வெள்ளி, சனி ஆகிய இரு விடுமுறை நாட்கள் தவிர்த ஏனைய நாட்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அழைப்பை ஏற்படுத்தி உங்களுடைய முறைப்பாட்டை பதிவு செய்ய முடியிம்.
மேலும் இந்த அவசர அழைப்பு மைய இலக்கத்தோடு அரபு, ஆங்கிலம், உருது, மலயாலம், ததகாலோக் (பிலிப்பைன்) ஆகிய மொழிகளினூடாக பேச முடியிம்
முறையிடக்கூடிய சந்தர்பங்கள் :
உங்களுடைய நிருவணம் உங்களுடைய Passport ஐ உங்களிடம் தராது வைத்திருத்தல்.
ஒப்பந்தத்திற்கு மாற்றமான வேலை ஏவுதல்.
விடுமுறை நாளில் அதாவது Day off இல் வேலைக்கு வரும்டி கட்டாயப்படுத்தல்
கட்டாய O/T செய்யிம்படி ஏவுதல்
மாத சம்பளத்தை உரிய திகதியில் தராதிருத்தல்
சம்பளம் வளங்காது நாட்களை கடத்துதல்
ஒப்பந்தத்திற்கு குறைவாக சம்பளம் வளங்குதல்
Medical/insurance/iqama இதில் ஏதாவது வழங்காமல் இருத்தல் அல்லது புதுப்பிக்காமல் விடுதல்
இது போன்ற எவ்வாறான பிரச்சினைகள் மற்றும் தொழிலார் சட்டம் தொடர்பான சந்தேகங்கள் என அனைத்திற்கும் தயங்காமல் அழைத்து உங்களுடைய பிரச்சினைகளை தெரியப்படுத்துங்கள்

குவைத்தில் Visa புதிப்பித்தல் செய்யும் போது இனி மருத்துவ பரிசோதனை கட்டாயம்!


Kuwait குவைத்
முக்கிய அறிவிப்பு:
குவைத்தில் Article 20 Number Visa-வில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு Visa புதிப்பித்தல் செய்யும் போது #மருத்துவ_பரிசோதனை கட்டாயம்:
இதில் சமையல்காரர்கள்,வீட்டுபணிப் பெண்கள்,ஆயாமார்கள், ஓட்டுநர்கள் ஆகியவர்கள் அடங்குவர்கள்.இவர்கள் பல தரப்பட்ட மக்களுடன் மிகவும் நெருங்கி பழகும் வாய்ப்பு உள்ளவர்கள் ஆவர்கள். எனவே Visa புதிப்பித்தல் செய்யும் போது மருத்துவ பரிசோதனை செய்து இவர்களுக்கு குவைத் அரசு வரையறை செய்யபட்டுள்ள தடைசெய்யப்பட்ட நோய்கள் எதுவுமே இல்லை எனபது உறுதி செய்த பிறகே Visa புதிப்பித்தல் செய்யப்படும்.
#இந்தியா #இலங்கை #பிலிப்பைன்ஸ் உட்பட 40 நாட்டு வெளிநாட்டு
தொழிலாளர்களுக்கு இந்த நடைமுறை பாதகமாகும். 2014 முதல் தாயகம் சென்று திரும்பி குவைத் வரும் வீடு சம்பந்தப்பட்ட வேலைகள் செய்யும் தொழிலாளர்களுக்கு இந்த நடைமுறை தற்போது வழக்கத்தில் உள்ளது.இந்த முயற்சி வெற்றிகரமாக அமைந்ததால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுபோல் Article number 17,18,22 பிரிவுகளில் குவைத் அரசு சம்பந்தப்பட்ட துறைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தனியார் கம்பெனியில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மற்றும் குடும்ப Visa-வில் தங்கியுள்ள நபர்களுக்கு வரும் நாட்களில் இந்த நடைமுறை பாதகமாகும் என்று தெரிகிறது.
இதுபோல் தற்போது உள்ள வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு மருத்து காப்பீட்டு திட்ட பண வரம்பு 50 KD-யில் இருந்து 130 KD ஆக உயர்த்த உள்ளதாகவும் தெரிகிறது. இதை தவிர வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு என குவைத்தின் மூன்று முக்கிய இடங்களில் மருத்துவமனை மற்றும் தனி HELPLINE மையம் அமைகவுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
நன்றி: குவைத் தமிழ் பசங்க

ரகசியமாய் கசிந்த வீடியோ : சியோமி ரகசியம் அம்பலம்!

ஸ்மார்ட்போன் கருவிகளைத் தவிர வீட்டு உபயோக பொருட்களான எம்ஐஏர் பியூரிஃபையர், எம்ஐ பாக்ஸ் செட்-டாப் பாக்ஸ் மற்றும் இதர கருவிகளை தயாரிக்கும் நிறுவனமாக சியோமி விளங்குகின்றது. இந்தியாவில் அதிவேகமாக முன்னணி இடத்தைப் பிடித்திருக்கும் சியோமி நிறுவனம் விற்பனையிலும் சிறந்து விளங்குகின்றது.
தற்சயம் சியோமி நிறுவனத்தின் புதிய கருவி சார்ந்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. இந்த வீடியோவில் அந்நிறுவனத்தின் வளைந்த திரை கொண்ட ஸ்மார்ட்போன்இயக்கப்படுவது தெளிவாக பதிவியாகியுள்ளது.

யுகு

வளையும் திரை கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் ஒன்றினை பயனர் தன் கையில் வைத்து இயக்கும் வீடியோ யுகு எனும் சீன இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கருவியானது MIUI சார்ந்த யூஸர் இன்டர்ஃபேஸ் கொண்டு இயங்குகின்றது.


அம்சங்கள்

வீடியோவில் பயனர் கருவியினை சீராக பயன்படுத்துவது தெளிவாக தெரிகின்றது. மேலும் கேம் ஒன்றையும் விளையாடுவது கருவி சார்ந்த எதிர்பார்ப்பினை எகிறச் செய்கின்றது.

வளைந்த டிஸ்ப்ளே

தொழில்நுட்ப சந்தையைப் பொருத்த வரை வளைந்த டிஸ்ப்ளேக்கள் சில காலமாக நமக்கு அறிமுகமான ஒன்றாகவே இருக்கின்றது. நோக்கியா நிறுவனத்தின் மார்ஃப் கான்செப்ட் 2008 ஆம் ஆண்டிலேயே வளைந்த டிஸ்ப்ளேவுடன் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.



சோனி

இதன் பின் சோனி மற்றும் சாம்சங் என பல்வேறு நிறுவனங்களும் வளைந்த டிஸ்ப்ளே கொண்ட கான்செப்ட் கருவிகளை அறிமுகம் செய்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றாக இருந்த போதும் அதிகாரப்பூர்வமாகச் சந்தையில் இத்தொழில்நுட்பம் வெளியிடப்படவில்லை.



எல்ஜி

இதே போல் எல்ஜி நிறுவனமும் ரூ.11,768 கோடி வரை வளைந்த டிஸ்ப்ளேக்களை தயாரிக்க முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்திருக்கின்றது. இதன் காரணமாக அந்நிறுவனத்தின் வளைந்த டிஸ்ப்ளேக்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கான பணிகள் நடைபெற்று வருவதையே பிரதிபலிக்கின்றது.


சாம்சங்

மேலும் சாம்சங் நிறுவனமும் வளைந்த டிஸ்ப்ளேக்களை கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், அடுத்த ஆண்டு துவக்கத்தில் அந்நிறுவனத்தின் வளைந்த திரை கொண்ட கருவிகளை எதிர்பார்க்கலாம் எனக் கூறப்படுகின்றது.

சியோமி

வளைந்த டிஸ்ப்ளே கொண்ட கருவிகளைப் பொருத்த வரை சியோமி நிறுவனம் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றது என்றாலும், அந்நிறுவனம் வளைந்த டிஸ்ப்ளே கொண்ட கருவிகளைத் தயாரித்து வருவது தற்சமயம் உறுதியாகியுள்ளது.

Jobs in Singapore

Jobs in Singapore    𝙎𝙞𝙣𝙜𝙖𝙥𝙤𝙧𝙚 𝙉𝙚𝙬 𝙍𝙚𝙦𝙪𝙞𝙧𝙚𝙢𝙚𝙣𝙩𝙨 𝘾𝙤𝙣𝙩𝙖𝙘𝙩 +91 9779259557\ 𝐍𝐀𝐌𝐄 - 𝐀𝐊𝐁𝐀𝐑 𝐊𝐇𝐀𝐍 𝐖𝐇...