அமெரிக்காவில் அடுத்த விமானத்துக்காக 5 மணி நேரம் காத்திருக்கிறீர்களா? அதே நேரத்தில் துபாய் விமான நிலையத்தில் உங்களது ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்ய இன்டெர்நெட் இல்லையா? இதெற்கெல்லாம் உங்களுக்கு தேவை வை-ஃபை பாஸ்வேர்டு. உலகின் எந்த விமான நிலையத்தில் இருந்தாலும் வை-ஃபை பாஸ்வேர்ட் உங்களுக்கு கிடைக்கும் என்றால் உங்கள் பதில் ''மகிழ்ச்சி'' தானே...அதை தான் செய்திருக்கிறார் அனில் போலட்
அனில் போலட் ஒரு ட்ராவலர், வல பதிவாளர், கம்ப்யூட்டர் செக்யூரிட்டி இன்ஜினியர். கடந்த ஆறு வருடங்களாக உலகைச் சுற்றி வரும் இவர் ஒவ்வொரு முறையும் தனது பயணத்தின்போது விமான நிலையங்களில் வை-பை பாஸ்வேர்ட் இல்லாமல் இருந்திருந்தால் மிகவும் கஷ்டப்பட்டிருப்பேன் என்கிறார். அதற்காக அவர் பயணித்த அனைத்து விமான நிலையங்களின் வை-பை பாஸ்வேர்டுகளை மேப்பில் தொகுத்துள்ளார்.
அதுமட்டுமின்றி தான் அடுத்து செல்ல இருக்கும் ஊர்கள் என்ன?
மற்ற யாரேனும் எந்த விமான நிலையத்தின் வை-ஃபையை பயன்படுத்தி அதன் விவரம் இதில் இல்லையென்றால் அவருக்கு அனுப்பும் வசதியையும் தந்துள்ளார். மற்றவர்கள் அளித்த விவரம் மற்றும் இவரது ஆறு வருட பயணத்தின்போது கிடைத்த அனைத்து விமான நிலையங்களின் தகவல் கீழே உள்ள மேப்பில் இருக்கிறது. இன்னும் தெற்காசிய நாடுகளை அவர் அப்டேட் செய்யவில்லை என்பதால் இந்திய விமான நிலைய விவரங்கள் இல்லை.
உலகம் சுற்றுவது தான் இவரது பொழுதுபோக்கு இன்னும் நிறைய நாடுகளின் பயணங்களில் அங்குள்ள விமான நிலையங்கள் பற்றியும், அதன் வை-பை பற்றியும் தொடர்ந்து இந்த மேப்பில் அப்டேட் செய்வேன் என்று கூறியுள்ளார். இது மட்டும் இவர் வேலை இல்லை. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்க்கை தேடலை நோக்கிய பயணம் மேற்கொள்ளும் இவர் துருக்கி நாட்டைச் சேர்ந்தவர். இதுவரை என்பது நாடுகளின் விமான நிலையங்களுக்கு பயணித்திருக்கிறார்.
நன்றி விகடன்...
No comments:
Post a Comment