Friday, October 21, 2016

சவூதியில் வேலையிழந்துள்ள 1,100 இந்தியர்கள் விரைவில் தாயகம் திரும்புவார்கள் என அறிவிப்பு !

சவூதி அரேபியாவில் வேலையை இழந்து வறுமையில் தவித்து வரும் இந்தியர்களில் 1,100 பேர் அடுத்த சில வாரங்களுக்குள் தாயகம் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சவூதி அரேபியாவுடன் இணைந்து மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளது.
சவூதி அரேபியாவில் உள்ள எண்ணெய் வயல்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் அதிக அளவில் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் அந்நாட்டில் நஷ்டத்தில் இயங்கியதாகக் கூறப்படும் சில தொழிற்சாலைகள் அண்மையில் மூடப்பட்டன. அவற்றில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு ஏற்கெனவே பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் இருந்த நிலையில், அவர்களது வேலையும் பறிபோனது.
இதனால், உணவுக்கு வழியின்றி அவர்கள் பசியால் வாடி வந்தனர். இதையடுத்து, சவூதியில் வேலை இழந்த இந்தியர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும்படி ரியாத்தில் இருக்கும் இந்தியத் தூதரகத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.
இதைத் தொடர்ந்து வெளிநாடு வாழ் இந்தியர்கள் நல அமைப்பும், ஜெட்டாவில் உள்ள இந்தியத் தூதரகமும் இணைந்து உணவு விநியோகிக்கும் பணிகளை மேற்கொண்டன.
இதனிடையே, வேலையை இழந்து, பிழைப்புக்கு வழி தேடி தவித்து வரும் இந்தியர்களை மீட்டு தாயகத்துக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதன் விளைவாக இந்தியர்கள் சிலர் தாயகம் திரும்பியுள்ளனர். இந்த விவகாரத்துக்குத் தீர்வு காண்பதற்காக வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே. சிங் சவூதி அரேபியாவுக்கு பல முறை சென்றார். தற்போதும் சவூதி சென்றுள்ள அவர், அந்நாட்டு அமைச்சர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
சவூதியிலிருந்து வெளியேறுவதற்குத் தேவையான விசா-வை எந்தவிதமான தடையுமின்றி இந்தியர்களுக்கு வழங்குமாறு அந்நாட்டு அரசிடம் வி.கே.சிங் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு விசாக்கள் வழங்கப்பட்டன. அவர்கள் அனைவரும் அடுத்த சில வாரங்களுக்குள் தாயகம் திரும்புவர் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சவூதி அரேபியாவில் பணிபுரிவோர்களுக்கான ஒரு பயனுள்ள தகவல்!




உங்களுடைய இகாமாவில் Fine அடிக்கப்பட்டுள்ளதா என்பதை மிக இலகுவாக சாதாரண Mobile SMS மூலம் பார்துக்கொள்ளமுடியிம்.

அதட்கு நீங்கள் செய்யவேண்டியது....
நீங்கள் ஒரு STC(sawa) பாவனையாளர் எனில்:
*56*உங்களுடைய இகாமா இலக்கத்தை டைப் செய்து 88993 எனும் இலக்கத்திட்கு SMS அனுப்பவும்.
- If you are a STC customer send SMS: *56*IQAMA NUMBER send to 88993.

நீங்கள் ஒரு Mobily பாவனையாளர் எனில்
*56*இகாமா இலக்கத்தை டைப் செய்து 625555 எனும் இலக்கத்திற்கு SMS அனுப்பவும்.
- If you are a Mobily user send SMS *56*YOUR IQAMA NUMBER sent to 625555.

நீங்கள் ஒரு Zain பாவனையாளர் எனில்;
*56*உங்களுடைய இகாமா இலலக்கத்தையிம் டைப் செய்து 709445 எனும் இலக்கத்திற்கு SMS அனுப்பவும்.
If you're a Zain customer send SMS
*56*YOUR IQAMA NUMBER send to 709445.

இதட்கான சேவை கட்டணமாக 1 ரியால் மற்றும் 50 ஹலாலா (SR1.50) அரவிடப்படும்.

பாம்பனில் பயங்கர தீவிபத்து 14 மீன் கம்பெனிகள் நாசம்

ராமேஸ்வரம் : பாம்பனில் 14 மீன் கம்பெனிகளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ரூ.70 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகின. ராமேஸ்வரம் அருகே பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் ஒரு மீன் கம்பெனியில் திடீரென தீப்பிடித்தது. பலத்த காற்று வீசியதால் தீ மளமளவென அடுத்தடுத்த கம்பெனிகளுக்கு பரவியது. மீனவர்கள் கடல் நீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவலறிந்த ராமேஸ்வரம் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் மீனவர்கள் தனஉலகு, சந்தியா, மோட்சம், தனபால், சந்திரபோஸ், சீலன் உட்பட 14 பேரின் மீன் கம்பெனிகள் எரிந்து சாம்பலாயின. இவற்றில் வைக்கப்பட்டிருந்த ரூ.70 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள், உபகரணங்கள், 9 டூவீலர்கள் எரிந்து சாம்பலாயின. மீன் கம்பெனிகளுக்கு அருகில் உள்ள குடிசையிலும் தீப்பற்றியது. வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்த மைக்கேல், இவரது மனைவி இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீவிபத்து குறித்து பாம்பன் போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் கலெக்டர் நடராஜன், ராமேஸ்வரம் தாசில்தார் ரத்தினவள்ளி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

Thank you : Dinakaran...

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை : கடலூர், புதுவையில் 1-ம் எண் எச்சரிக்கை புயல் கூண்டு


புதுச்சேரி: தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. தேனி மாவட்டம் பெரியகுளம், வடுகம்பட்டி, தேவதானம்பட்டி, மேலமங்களம், மற்றும் ஆண்டிபட்டி, ஆகிய இடங்களில் கனமழை பெய்தது. கண்டமனூர், ராமலிங்கபுரம், வருசநாட்டிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம், உள்ளிட்ட சில இடங்களில் மிதமான மழை பெய்தது. 


திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, நத்தம், வக்கம்பட்டி, செம்பட்டி உள்ளிட்ட ஊர்களில் கனமழை பெய்தது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, அலங்காநல்லூர், திருப்பரங்குன்றம், அவனியாபுரம் ஆகிய இடங்களில் மழை பெய்தது. புதுக்கோட்டையிலும் நல்ல மழை பெய்தது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. 


சுமார் 1 மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனிடையே நாகை மற்றும் பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர், புதுச்சேரி, காரைக்கால் துறைமுகத்திலும் 1-ம் எண் எச்சரிக்கை புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Thank you : Dinakaran...

உடனடியாக உங்கள் ஏ.டி.எம். பின் நம்பரை மாற்றுங்கள்? வங்கிகளின் #HighAlert!

சில சமயங்களில் வங்கிகளிடம் இருந்து உங்கள் எண்ணுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்திருப்பதைக் கவனித்திருப்பீர்கள். உங்கள் ஏ.டி.எம் பின்கோட் எண்ணை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். இந்த செய்தி பாதுகாப்பை மேம்படுத்த மட்டுமே என வந்திருக்கும். நம்மில் பலர் அந்த செய்தியை ''ஜஸ்ட் லைக் தட்''  கடந்து செல்வதையே வாடிக்கையாக வைத்திருப்போம். ஆனால் அதன் விளைவு எவ்வளவு பெரிதாக வளர்ந்திருக்கிறது தெரியுமா? 32 லட்சம் டெபிட் கார்டுகளின் பின் நம்பர்கள் களவு போய்யுள்ளதாகவும், இதில் பெருமபாலான கார்டுகள் விசா மற்றும் மாஸ்டர் கார்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.




வங்கிகள் பின் நம்பரை மாற்ற சொல்வது ஏன்?

இந்தியாவில் 32 லட்சம் டெபிட் கார்டுகளை மாற்றித் தரவோ அல்லது  வாடிக்கையாளர்களை பின் நம்பரை மாற்றவோ சொல்ல வங்கிகள் முடிவெடுத்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் சீனாவில் அங்கீகாரமற்ற முறையில் இந்த எண்கள் பயன்படுத்தப்பட்டு கணக்குகளில் இருந்து பணம் எடுக்கப்படுகிற‌து என்ற குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது.  இந்த பரிமாற்றங்கள் சீனாவில் ஏ.டி.எம், பொருட்களை பர்சேஸ் செய்யும் இடம் போன்ற இடங்களில் பதிவாகியுள்ளது. 

வாடிக்கையாளரின் தகவல்கள் திருடப்பட்டு அதே போன்ற கார்டுகள் க்ளோனிங் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. மொத்தமுள்ள 32 லட்சம் கார்டுகளில் 26 லட்சம் கார்டுகள் விசா மற்றும் மாஸ்டர் கார்டு வகைகளை சேர்ந்தது என்றும், மீதமுள்ள 6 லட்சம் கார்டுகள் ரூ-பே கார்டுகள் என்றும் கூறப்படுகிறது. இதில் பெரும்பாலான  கார்டுகள் எஸ்.பி.ஐ மற்றும் ஹச்.டி.எஃப்.சி வங்கிகளைச் சேர்ந்த கார்டுகளாக உள்ளன. 
எஸ்.பி,ஐ 6 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு இந்த விஷயம் தொடர்பாக புதிய கார்டுகளை வழங்க முடிவு செய்துள்ளதாக கூறுகிறது. வங்கிகள் எண்களை மாற்ற சொல்கிறது என்பதை சாதாரண விஷயமாக கருதாமல் அதனைக் கொஞ்சம் சீரியசாக அணுகுங்கள். வங்கிகள் அடிக்கடி பின் நம்பரை மாற்றுவது நினைவில் வைத்துக் கொள்ள கடினமாக தான் இருக்கும் ஆனால் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஒரு முறையாவது மாற்றிவிடுங்கள் என்கின்றன வங்கிகள். 
உங்கள் எண்கள் இந்த 32 லட்சம் எண்களில் இருக்கறதோ? இல்லையோ? பாதுகாப்புக்காக உங்கள் ஏ.டி.எம்  பின் நம்பரை உடனடியாக மாற்றி விடுங்கள்.

தகவல்கள் எப்படி திருடப்படுகின்றன?
நமக்கு மட்டுமே தெரிந்த நமது பின் நம்பர், கார்டு எண்கள் எப்படி திருடப்படுகின்றன. அதுவும் சீனாவில் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்றால் அதற்கு பின்வரும் காரணங்கள் முக்கியமானவையாக கூறப்படுகின்றன.
1. பர்சேஸ் செய்ய ஏ.டி.எம் கார்டுகளை பயன்படுத்தும் இடத்தில் ''ஸ்கிம்மர்கள்'' எனும் கருவி ஸ்வைப் செய்யும் கருவியுடன் இணைக்கப்பட்டு மொத்த தகவலும் எடுக்கப்படலாம்.
2. ஏ.டி.எம் நிலையங்களிலேயே ஸ்கிம்மர்கள் பொருத்தப்பட்டு அனுமதியற்ற முறையில் தகவல்கள் திருடப்படலாம்.
3. போலியான இணையதளங்களில் பணப்பரிவர்த்தனை செய்வது முறையற்ற முறையில் ஸ்க்ரீன் கேப்சர் செய்யப்படுவது.
4. அதிகாரபூர்வமற்ற வங்கி ஆப்ஸ்கள் மூலமாகவும் தகவல்கள் திருடப்படுகிறது.
இப்படியெல்லாம் திரட்டப்படும் தகவல்கள் குறிப்பிட்ட பெரிய தொகைக்கு  விற்கப்படுகிறது. இப்படித் தான் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்பட்டு பணம் திருடுபோகிறது.

தகவல்கள் எப்படி திருடப்படுகின்றன?
நமக்கு மட்டுமே தெரிந்த நமது பின் நம்பர், கார்டு எண்கள் எப்படி திருடப்படுகின்றன. அதுவும் சீனாவில் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்றால் அதற்கு பின்வரும் காரணங்கள் முக்கியமானவையாக கூறப்படுகின்றன.
1. பர்சேஸ் செய்ய ஏ.டி.எம் கார்டுகளை பயன்படுத்தும் இடத்தில் ''ஸ்கிம்மர்கள்'' எனும் கருவி ஸ்வைப் செய்யும் கருவியுடன் இணைக்கப்பட்டு மொத்த தகவலும் எடுக்கப்படலாம்.
2. ஏ.டி.எம் நிலையங்களிலேயே ஸ்கிம்மர்கள் பொருத்தப்பட்டு அனுமதியற்ற முறையில் தகவல்கள் திருடப்படலாம்.
3. போலியான இணையதளங்களில் பணப்பரிவர்த்தனை செய்வது முறையற்ற முறையில் ஸ்க்ரீன் கேப்சர் செய்யப்படுவது.
4. அதிகாரபூர்வமற்ற வங்கி ஆப்ஸ்கள் மூலமாகவும் தகவல்கள் திருடப்படுகிறது.
இப்படியெல்லாம் திரட்டப்படும் தகவல்கள் குறிப்பிட்ட பெரிய தொகைக்கு  விற்கப்படுகிறது. இப்படித் தான் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்பட்டு பணம் திருடுபோகிறது.



என்ன செய்ய வேண்டும்?
1. வங்கிகளின் இணையதளங்களை நீங்களே டைப் செய்து செல்லுங்கள். இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ்-ல் வரும் லின்க்களை க்ளிக் செய்யாதீர்கள். 
2.வங்கிகளின் முறையான ஆப்ஸை மட்டுமே பயன் படுத்தவும். 
3. பெட்ரோல் பங்குகள், உணவகங்கள் இங்கெல்லாம் டெபிட் கார்டை பயன்படுத்தும்போது அந்த கருவிகளில் வித்தியாசமாக ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை கவனியுங்கள்.
4. ஆன்லைன் ஆர்டர்களை கூடியமட்டில் கேஷ் ஆன் டெலிவரியாக செய்யுங்கள்
5. ப்ரெளசிங் சென்டர்களில் பணப்பரிவர்த்தனை செய்வதை தவிருங்கள்.
நன்றி : விகடன்...


உடல் எடை அளவோடு இருக்க சில உணவுகள்

“உணவில் பிரச்சினை இல்லை. பசி நேரத்தில் நாம் கொரிக்கும் சில உணவுகளே உடல் எடையைக் கூட்டுகின்றன” – பெரும்பாலான சத்துணவு நிபுணர்கள் கூறுவது இதைத்தான்.
சிரமம்தான். இருப்பினும், நார்ச்சத்தும், புரதச்சத்தும் அதிகம் கொண்ட உணவுகள் வயிற்றை நிரப்பி, உங்கள் பசியைக் குறைக்கும் என்பதில் ஐயமில்லை. இதோ அவற்றுள் சில….


1.ஆப்பிள்


பசி நேரத்தில் ஒரு ஆப்பிளைச் சாப்பிட்டால், பசியை அப்படியே அடக்கிவிடும். சலிப்புத் தட்டாமல் இருக்க, ஆப்பிளின் வகையை மாற்றிக்கொண்டே இருங்கள்.

2.முட்டை

   
           
       

எந்த வேளைக்கும் பொருந்தும் உணவு முட்டை. தயாரிக்கும் நேரமும் குறைவு. புரதமும், கொழுப்பும் சேர்ந்த உணவு என்பதால், எளிதில் பசிக்காது. அவித்துச் சாப்பிடுவது மேலும் நல்லது.

3.அத்திப்பழம்


                

மிக அதிகமான நார்ச்சத்து கொண்ட பழங்களில் ஒன்று அத்தி. அத்திப்பழத்தில் இயற்கையான இனிப்பும் உண்டு. உணவுக்கு இடையில் ஓர் அத்திப் பழத்தைச் சாப்பிட்டால், அடுத்தவேளை வரை தாக்குப் பிடிக்கும்.


4.உருளைக்கிழங்கு


           





உருளைக்கிழங்கு என்றாலே அது மாவுச்சத்து அதிகம் கொண்டது; உடல் எடையைக் கூட்டும் என்ற தவறான எண்ணம் உள்ளது. ஆனால் அதை எப்படிச் சாப்பிடுகிறோம் என்பதில்தான் எல்லாம் அடங்கியுள்ளது. அவித்த, வேகவைத்த, பேக் (Bake) செய்யப்பட்ட சிறு உருளை, உங்கள் அடுத்த வேளை உணவைக் கணிசமாகக் குறைக்கும்.

5.பயிறு வகைகள்

             

நார்ச்சத்தும், மாவுச்சத்தும் கொண்ட பச்சைப்பயறு, தட்டைப்பயறு, கொண்டைக்கடலை, காராமணி, சோயா போன்றவற்றில் ஏதாவது ஒன்றை அவித்து சிறு அளவு எடுத்துக்கொண்டால், இரவு உணவின் அளவு பெரும்பகுதி குறைந்துவிடும்.
முயன்று பாருங்களேன்!

அல்குர்ஆனை பூஜை செய்த தொலைக்காட்சி- அப்துல்பாசித் மௌலவி கண்டனம்



அல்குர்ஆனை வைத்து திறப்பு விழாவில் பூஜை செய்த சம்பவத்திற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் பிரபல மார்க்க பிரச்சார சொற்பொழிவளர் அப்துல் பாசித் புகாரி,
இன்று மார்க்கத்தை அதிகம் தெளிவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது. இலங்கையின் மத சுதந்திரம் குறித்து அதிகம் நான் அறிவேன். அதற்காக அல்குர்ஆனை வைத்து பூஜை செய்யும் போது வேடிக்கை பார்த்த முஸ்லிம்கள் குறித்து கவலையடைகிறேன். அல்லாஹ் அவர்களுக்கு ஹிதாயத் வழங்கட்டும் ரமழான் காலங்களில் இஸ்லாமிய போதனைகளை வழங்கும் சக்தி டி.வி இப்படியான ஒரு செய்திருப்பது ஏற்க முடியாதது. இதற்காக அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

Jobs in Singapore

Jobs in Singapore    𝙎𝙞𝙣𝙜𝙖𝙥𝙤𝙧𝙚 𝙉𝙚𝙬 𝙍𝙚𝙦𝙪𝙞𝙧𝙚𝙢𝙚𝙣𝙩𝙨 𝘾𝙤𝙣𝙩𝙖𝙘𝙩 +91 9779259557\ 𝐍𝐀𝐌𝐄 - 𝐀𝐊𝐁𝐀𝐑 𝐊𝐇𝐀𝐍 𝐖𝐇...