“உணவில் பிரச்சினை இல்லை. பசி நேரத்தில் நாம் கொரிக்கும் சில உணவுகளே உடல் எடையைக் கூட்டுகின்றன” – பெரும்பாலான சத்துணவு நிபுணர்கள் கூறுவது இதைத்தான்.
சிரமம்தான். இருப்பினும், நார்ச்சத்தும், புரதச்சத்தும் அதிகம் கொண்ட உணவுகள் வயிற்றை நிரப்பி, உங்கள் பசியைக் குறைக்கும் என்பதில் ஐயமில்லை. இதோ அவற்றுள் சில….
1.ஆப்பிள்
பசி நேரத்தில் ஒரு ஆப்பிளைச் சாப்பிட்டால், பசியை அப்படியே அடக்கிவிடும். சலிப்புத் தட்டாமல் இருக்க, ஆப்பிளின் வகையை மாற்றிக்கொண்டே இருங்கள்.
2.முட்டை
2.முட்டை
எந்த வேளைக்கும் பொருந்தும் உணவு முட்டை. தயாரிக்கும் நேரமும் குறைவு. புரதமும், கொழுப்பும் சேர்ந்த உணவு என்பதால், எளிதில் பசிக்காது. அவித்துச் சாப்பிடுவது மேலும் நல்லது.
3.அத்திப்பழம்
மிக அதிகமான நார்ச்சத்து கொண்ட பழங்களில் ஒன்று அத்தி. அத்திப்பழத்தில் இயற்கையான இனிப்பும் உண்டு. உணவுக்கு இடையில் ஓர் அத்திப் பழத்தைச் சாப்பிட்டால், அடுத்தவேளை வரை தாக்குப் பிடிக்கும்.
4.உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு என்றாலே அது மாவுச்சத்து அதிகம் கொண்டது; உடல் எடையைக் கூட்டும் என்ற தவறான எண்ணம் உள்ளது. ஆனால் அதை எப்படிச் சாப்பிடுகிறோம் என்பதில்தான் எல்லாம் அடங்கியுள்ளது. அவித்த, வேகவைத்த, பேக் (Bake) செய்யப்பட்ட சிறு உருளை, உங்கள் அடுத்த வேளை உணவைக் கணிசமாகக் குறைக்கும்.
5.பயிறு வகைகள்
நார்ச்சத்தும், மாவுச்சத்தும் கொண்ட பச்சைப்பயறு, தட்டைப்பயறு, கொண்டைக்கடலை, காராமணி, சோயா போன்றவற்றில் ஏதாவது ஒன்றை அவித்து சிறு அளவு எடுத்துக்கொண்டால், இரவு உணவின் அளவு பெரும்பகுதி குறைந்துவிடும்.
முயன்று பாருங்களேன்!
No comments:
Post a Comment