புதுச்சேரி: தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. தேனி மாவட்டம் பெரியகுளம், வடுகம்பட்டி, தேவதானம்பட்டி, மேலமங்களம், மற்றும் ஆண்டிபட்டி, ஆகிய இடங்களில் கனமழை பெய்தது. கண்டமனூர், ராமலிங்கபுரம், வருசநாட்டிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம், உள்ளிட்ட சில இடங்களில் மிதமான மழை பெய்தது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, நத்தம், வக்கம்பட்டி, செம்பட்டி உள்ளிட்ட ஊர்களில் கனமழை பெய்தது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, அலங்காநல்லூர், திருப்பரங்குன்றம், அவனியாபுரம் ஆகிய இடங்களில் மழை பெய்தது. புதுக்கோட்டையிலும் நல்ல மழை பெய்தது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.
சுமார் 1 மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனிடையே நாகை மற்றும் பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர், புதுச்சேரி, காரைக்கால் துறைமுகத்திலும் 1-ம் எண் எச்சரிக்கை புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Thank you : Dinakaran...
No comments:
Post a Comment